| நித்யானந்தா முன்னிலையில் ரஞ்சிதாவிடம் விசாரணை! |
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரம் அமைத்து பிரபலமானார். அவரது ஆசிரமத்துக்கு ஏராளமான இளம் பெண்கள் வந்து அவரை தரிசிப்பதை பெரும் பாக்கியமாக கருதினர். இதனை தனக்கு சாதக மாகபயன்படுத்திக் கொண்ட நித்யானந்தா இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை கைது செய்த கர்நாடக போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நித்யானந்தாவிடம் கர்நாடக சிஐடி போலீசார் தொடர்ந்து இன்று 4வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் தொடக்கத்தில் முரண்டு பிடித்த நித்யானந்தா, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்ததையடுத்து, விசாணைக்கு ஒத்துழைப்பாக கூறினார். 3வது நாள் கேட்ட சில கேள்விகளுக்கு நடிகை ரஞ்சிதாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று நித்யானந்தா கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகை ரஞ்சிதாவிடம் நித்யானந்தா முன்னிலையில் இன்று விசாரணை நடைபெறக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. |
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment