Monday, April 26, 2010

கடத்தல்கள் இடம்பெற்றால் அறியத்தரவும்: யாழ். கட்டளைத் தளபதி _


யாழ் மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடத்தல் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. எனினும் கடத்தல் சம்பவங்ள் இடம்பெற்றால் அவ் விடயம் தொடர்பில் எமக்கு அறியத்தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.


யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம் பெறும் கடத்தல் சம்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். குடா நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 4 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். குடா நாட்டின் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளிலே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
நித்யானந்தா முன்னிலையில் ரஞ்சிதாவிடம் விசாரணை!
நித்யானந்தா முன்னிலையில் நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரம் அமைத்து பிரபலமானார். அவரது ஆசிரமத்துக்கு ஏராளமான இளம் பெண்கள் வந்து அவரை தரிசிப்பதை பெரும் பாக்கியமாக கருதினர்.

இதனை தனக்கு சாதக மாகபயன்படுத்திக் கொண்ட நித்யானந்தா இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை கைது செய்த கர்நாடக போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நித்யானந்தாவிடம் கர்நாடக சிஐடி போலீசார் தொடர்ந்து இன்று 4வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் தொடக்கத்தில் முரண்டு பிடித்த நித்யானந்தா, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்ததையடுத்து, விசாணைக்கு ஒத்துழைப்பாக கூறினார்.

3வது நாள் கேட்ட சில கேள்விகளுக்கு நடிகை ரஞ்சிதாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று நித்யானந்தா கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகை ரஞ்சிதாவிடம் நித்யானந்தா முன்னிலையில் இன்று விசாரணை நடைபெறக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் சிறிலங்காவின் கொண்டாட்டங்கள் குழப்பப்பட்டன
சிறிலங்கா நாட்டின் கலாச்சார பெருமைகளை பிற நாடுகளுக்கு அறிவிப்பதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த வளைகுடா நாடான குவைத்தில் சிறிலங்கா கலாச்சார வாரம் என்னும் நிகழ்ச்சி நடந்தது.
நித்யானந்தா முன்னிலையில் ரஞ்சிதாவிடம் விசாரணை!
நித்யானந்தா முன்னிலையில் நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன